மனைவியுடன் பேசக்கூடாது என்று கூறிய வாலிபருக்கு கத்திக்குத்து
ராணிப்பேட்டையில் மனைவியுடன் தனது மனைவியுடன் பேசக்கூடாது என்று கூறிய வாலிபரை கத்தியால் குத்திய ஐ.டி. ஊழியர் கைது செய்யப்பட்டார்.
ராணிப்பேட்டையில் மனைவியுடன் தனது மனைவியுடன் பேசக்கூடாது என்று கூறிய வாலிபரை கத்தியால் குத்திய ஐ.டி. ஊழியர் கைது செய்யப்பட்டார்.
கத்திக்குத்து
ராணிப்பேட்டை அருகே உள்ள மாந்தாங்கல் மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (வயது 32). இவரது மனைவியும், சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்த கேபா சத்யசீலன் (34) என்பவரும் சென்னையில் உள்ள ஐ.டி. தொழிற்சாலை ஒன்றில் ஒன்றாக வேலை பார்த்து வந்துள்ளனர்.
இந்தநிலையில் கேபா சத்யசீலன் மாந்தாங்கல் மோட்டூருக்கு வந்து, தினேஷின் மனைவியிடம் பேச வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு தினேஷ் தனது மனைவியிடம் நீ பேசக்கூடாது என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கேபா சத்தியசீலன், தினேசுடன் தகராறு செய்து, தான் வைத்திருந்த கத்தியால் தினேஷின் தலை, தோள் பட்டை ஆகிய இடங்களில் வெட்டி ரத்த காயம் ஏற்படுத்தி உள்ளார்.
ஐ.டி. ஊழியர் கைது
மேலும் குடும்பத்தையே கொலை செய்து விடுவேன் என கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து காயம் அடைந்த தினேஷ் வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தினேஷின் குடும்பத்தினர் ராணிப்பேட்டை போலீசில் புகார் செய்தனர்.
புகாரின்பேரில் ராணிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கேபா சத்யசீலனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.