பாலியல் கொடுமை செய்து சிறுமியை கொன்ற வடமாநில வாலிபருக்கு சாகும் வரை சிறை
8 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வடமாநில வாலிபருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து, ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பளித்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
8 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வடமாநில வாலிபருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து, ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பளித்தது.
சிறுமி கொலை
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே 8 வயது சிறுமி கடந்த 20.1.2020-ந் தேதியன்று தனது வீட்டில் இருந்து வெளியே சென்றாள். மீண்டும் அந்த சிறுமி வீட்டிற்கு திரும்பவரவில்லை. இதையடுத்து அவளது குடும்பத்தினர் பல இடங்களில் சிறுமியை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்தநிலையில் மறுநாள் அங்குள்ள காட்டுப்பகுதியில் சிறுமியின் உடல் மீட்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திய போது, சிறுமி கடத்தி செல்லப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது உறுதியானது.
சாகும் வரை சிறை
இந்த கொலை தொடர்பாக சிவகாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மஜம்அலி (21) என்பவரை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை நீதிபதி பூர்ண ஜெயஆனந்த் விசாரித்து நேற்று தீர்ப்பு வழங்கினார். சிறுமியை பாலியல் கொடுமை செய்து கொலை செய்த மஜம்அலிக்கு சாகும் வரை சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.