மீன் வியாபாரி வீட்டில் திருடிய 2 பேர் கைது


மீன் வியாபாரி வீட்டில் திருடிய 2 பேர் கைது
x

மீன் வியாபாரி வீட்டில் திருடிய 2 பேர் கைது

கன்னியாகுமரி

அஞ்சுகிராமம்:

அஞ்சுகிராமம் அருகே காணிமடத்தைச் சேர்ந்தவர் தாம்சன், மீன் ஏற்றுமதி வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி ஜெமிஷா. கடந்த 13-ந்தேதி தாம்சன் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தூத்துக்குடியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். மறுநாள் வீட்டுக்கு திரும்பியபோது, முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறையில் பீரோவில் இருந்த 3¾ பவுன் தங்கநகை மற்றும் ரூ.31 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஜெமிஷா கொடுத்த புகாரின் பேரில் அஞ்சுகிராமம் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் வழக்குபதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தார்.

இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி தலைமையிலான போலீசார் ரஸ்தாகாடு விலக்கு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர். இதையடுத்து போலீசார் அவர்களை அஞ்சுகிராமம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் ராஜாக்கமங்கலத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன்(50), அழகப்பபுரத்தை சேர்ந்த பிரான்சிஸ் ராஜா(38) என்பதும், 2 பேரும் சேர்ந்து காணிமடம் மீன்வியாபாரி தாம்சன் வீட்டில் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். ேமலும், அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story