பாறையில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தவர் திருட்டு வழக்கில் கைது
கன்னியாகுமரி கடலில் பாறையில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தவர் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி கடலில் பாறையில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தவர் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டார்.
தற்கொலை மிரட்டல்
கன்னியாகுமரியில் ஆடி அமாவாசை முன்னிட்டு முன்னோர்களுக்கு பலி தர்ப்பணம் கொடுப்பதற்காக நேற்று முன்தினம் லட்சக்கணக்கானோர் குவிந்தனர். இதனையொட்டி 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்தநிலையில் கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள மரண பாறையில் ஒரு வாலிபர் ஏறி நின்று கடலில் குதித்து தற்கொலை செய்யப் போவதாக மிரட்டல் விடுத்தார். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கடலில் நீந்தி சென்று அந்த வாலிபரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
திருட்டு வழக்கில் கைது
விசாரணையில் அவர் மயிலாடி பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (வயது28) என்பதும் முன்னோர்களுக்கு பலி தர்ப்பணம் செய்ய வந்த நிலையில் மது போதையில் பாறையில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது.
தொடர்ந்து அவரை எச்சரித்து அனுப்பினர். அவர் திரும்ப செல்லும் போது கன்னியாகுமரி பகுதியில் நிறுத்தி இருந்த ஆவரைக்குளம் பகுதியை சேர்ந்த ராஜன் என்பவரது மோட்டார் சைக்கிளை திருடி எடுத்து சென்றார். இதை பார்த்த ராஜன் அவரை மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
இதுகுறித்து ராஜன் கொடுத்த புகாரின் பேரில் சந்தோசை ேபாலீசார் கைது செய்தனர்.