ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கியமின்வாரிய அதிகாரி கைது


தினத்தந்தி 26 Jan 2023 12:15 AM IST (Updated: 26 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி அருகே ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி

நாலாட்டின்புத்தூர்:

கோவில்பட்டி அருகே தொழிலாளியிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது செய்யப்பட்டார்.

தொழிலாளி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் பாரதிசங்கர். விவசாய தொழிலாளியான இவரது நிலம் கோவில்பட்டி அருகே நாலாட்டின்புத்தூரில் உள்ளது.

இந்த நிலத்தின் வழியாக மேல் பகுதியில் செல்லும் மின்ஒயர் தாழ்வாகவும், மின்கம்பம் பழுதடைந்தும் இருந்தது. இதை மாற்றுவதற்காக நாலாட்டின்புத்தூர் மின்வாரிய அலுவலகத்தில் பாரதிசங்கர் விண்ணப்பித்து இருந்தார்.

ரூ.5 ஆயிரம்

இந்த நிலையில் அந்த அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வரும் கயத்தாறு பகுதியை சேர்ந்த ெபான்ராஜா (வயது 57) என்பவர், பாரதிசங்கரிடம் விண்ணப்பத்தை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதற்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது.

ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத பாரதிசங்கர் இதுகுறித்து தூத்துக்குடி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார்.

கையும், களவுமாக பிடித்தனர்

போலீசார் ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரத்தை பாரதிசங்கரிடம் கொடுத்து, அதை ெபான்ராஜாவிடம் கொடுக்க கூறினர்.

நேற்று காலையில் மின்வாரிய அலுவலகத்திற்கு பாரதிசங்கர் சென்றார். அங்கிருந்த பொன்ராஜாவிடம் ரூ5 ஆயிரத்தை கொடுத்தார்.

அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஹெக்டர் தர்மராஜ் தலைமையிலான போலீசார் அதிரடியாக பொன்ராஜாவை கையும், களவுமாக பிடித்தனர்.

கைது-பரபரப்பு

தொடர்ந்து விசாரணை நடத்தி பொன்ராஜாவை கைது செய்து அழைத்து சென்றனர்.

கோவில்பட்டி அருகே லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story