மண் திருட்டில் ஈடுபட்டவர் கைது
மண் திருட்டில் ஈடுபட்டவர் கைது; லாரி பறிமுதல்
நெல்லை அருகே தாழையூத்து கிராம நிர்வாக அலுவலர் இசக்கிமுத்து மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மர்மநபர்கள் 2 பேர் தாழையூத்து செங்கலம் ரோடு பகுதியில் அனுமதியின்றி பொக்லைன் எந்திரம் மூலம் லாரியில் சரள்மண்ணை அள்ளிக்கொண்டு இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர் இசக்கிமுத்து மண் திருட்டில் ஈடுபட்ட ஒருவரை பிடித்து தாழையூத்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் நடத்திய விசாரணையில் அவர் தென்கலம் பகுதியை சேர்ந்த கார்த்திக் ராஜா (வயது 31) என்பதும் அவருடன் மண் திருட்டில் ஈடுபட்டது அதே பகுதியை சேர்ந்த வசந்த் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கார்த்திக் ராஜாவை கைது செய்தனர். மேலும் மண் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட பொக்லைன் எந்திரம், லாரி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. வசந்தை போலீசார் தேடி வருகின்றனர்.