பள்ளிக்கூடம் சென்று வீடு திரும்பிய பிளஸ்-1 மாணவி திடீர் தற்கொலை


பள்ளிக்கூடம் சென்று வீடு திரும்பிய  பிளஸ்-1 மாணவி திடீர் தற்கொலை
x

பள்ளிக்கூடம் சென்று வீடு திரும்பிய மாணவி தூக்குப்போட்டு திடீரென தற்கொலை செய்துககொண்டார்.

விருதுநகர்

சிவகாசி,

பள்ளிக்கூடம் சென்று வீடு திரும்பிய மாணவி தூக்குப்போட்டு திடீரென தற்கொலை செய்துககொண்டார்.

பிளஸ்-1 மாணவி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள அய்யம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மனைவி கடல் மீனா. இவர்களுக்கு பாண்டிச்செல்வி, யோகலட்சுமி (வயது 17) என்ற 2 மகள்கள்..

கண்ணன், கடல் மீனா இருவரும் மாரனேரி பகுதியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் கூலி தொழிலாளர்களாக வேலை செய்து வருகிறார்கள். மூத்த மகள் பாண்டிச்செல்விக்கு திருமணம் முடிந்து அதே பகுதியில் வசித்து வருகிறார். இளைய மகள் யோகலட்சுமி அதே பகுதியில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

தூக்கில் தொங்கினார்

இந்தநிலையில் நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற யோகலட்சுமி, மாலையில் வீடு திரும்பினார். அப்போது வீட்டில் யாரும் இல்லை.

சற்று ேநரம் கழித்து அவருடைய பாட்டி சுப்புத்தாய் வீடு திரும்பிய போது, வீட்டில் யோகலட்சுமி தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரின் அலறல் சத்தம் கேட்டவுடன் அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர். மாணவியின் உடலை கீழே இறக்கினர். இதுகுறித்து தகவல் அறிந்த மாரனேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அய்யம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவியின் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story