திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு


திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற  மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு
x
தினத்தந்தி 29 Sept 2022 12:15 AM IST (Updated: 29 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்ெசந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார்-பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா பயின்றோர் கழகம் சார்பில் கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது.

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் காயல்பட்டினம் அரசு பள்ளி மாணவி சமீரா முதல் பரிசையும், நாலுமாவடி காமராஜ் பள்ளி மாணவர் வெங்கடேஷ்வரன் 2-வது பரிசையும், வரண்டியவேல் இந்து நடுநிலைப்பள்ளி மாணவி அனிதா ரஞ்சிதம் 3-ம் பரிசையும் பெற்றனர். பள்ளிகளுக்கான கட்டுரை போட்டியில் குலசேகரன்பட்டினம் வள்ளியம்மை பள்ளி மாணவி ஆஷிகா மீனா மற்றும் கல்லூரிகளுக்கான கட்டுரை போட்டியில் வாவு கல்லூரி மாணவி ரீஜாய்ஸ் பியூலா முதல் பரிசையும், கோவிந்தம்மாள் ஆதித்தனார் கல்லூரி மாணவி சித்திரை வடிவு 2-ம் பரிசும், கொம்மடிக்கோட்டை சங்கரபகவதி கல்லூரி மாணவி சித்ரா 3-ம் பரிசும் பெற்றனர். பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் காமராஜ் பள்ளி மாணவி அபிபானு முதல் பரிசும், வள்ளியம்மையார் பள்ளி மாணவி அக்‌ஷரா 2-ம் பரிசும், காயல்பட்டினம் அரசு பள்ளி மாணவி சுபஸ்ரீ, திருச்செந்தூர் அரசு பள்ளி மாணவி நர்மதா ஆகியோர் 3-ம் பரிசும் பெற்றனர். கல்லூரி மாணவர் பேச்சு போட்டியில் போப் கல்லூரி மாணவி பிரின்ஷிபா எஸ்தர் முதல்பரிசும், சங்கரபகவதி கல்லூரி மாணவி சகாய பமீலா 2-ம் பரிசும், வாவு கல்லூரி மாணவி சவுமியா 3-ம் பரிசும் பெற்றனர். வினாடி-வினா போட்டியில் வாவு கல்லூரி மாணவியர் பாத்திமா பாகிரா, ஜெய்னப் ஆகியோர் முதல் பரிசும், கோவிந்தம்மாள் ஆதித்தனார் கல்லூரி மாணவியர் கிருபாதேவி, ரக்ஸனா ஆகியோர் 2-ம் பரிசும், விளாத்திகுளம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கல்லூரி மாணவியர் புவனேஷ்வரி, ஹேமாஸ்ரீமதி ஆகியோர் 3-ம் பரிசும் பெற்றனர்.

பரிசளிப்பு விழாவுக்கு கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் தி.வெங்கட்ராமராஜ் பங்கேற்று பரிசுகளை வழங்கினார். விழாவில் ஆதித்தனார் கல்லூரி செயலா் ச.ஜெயக்குமார், ஆதித்தனார்கல்வி நிறுவன ெயலர் சௌ.நாராயணராஜன், பயின்றோர் கழக துணைத்தலைவர் ஜெயசிங் ராமராஜ் ஆகியோர் பேசினர். தமிழ்த்துறை முன்னாள் பேராசிரியர் சுயம்பு சிறப்புரையாற்றினார். முன்னதாக கழக செயலாளர் ஜெயபோஸ் வரவேற்று பேசினாா். இணைச் ெசயலாளர் கதிரேசன் நன்றி கூறினார்.

பொருளாளர் சித்திரைராஜா, போட்டி நடுவர்கள் வசுமதி, ஸ்ரீதேவி, முத்துக்குமார், எழிலி, ராஜேஷ், மகேஸ்வரி, மோதிலால் தினேஸ் மற்றும் பயின்றோர் கழக செயற்குழு உறுப்பினர்கள், மாணவ, மாணவியர் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story