பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த தலைமை காவலர் பணியிடை நீக்கம்


பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த தலைமை காவலர் பணியிடை நீக்கம்
x

பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த வாணாபுரம் போலீஸ் நிலைய தலைமை காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை தாலுகா வாணாபுரம் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக ராஜேந்திரன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு விடுதிகள் சோதனை உள்ளிட்ட பணிகளுக்காக திருவண்ணாமலையில் சிறப்பு பணிக்கு அமர்த்தப்பட்டார்.

அப்போது அவர் திருவண்ணாமலையில் ஒரு விடுதியில் சோதனை நடத்திய போது அங்கிருந்த பெண்ணிடம் சந்தேகத்தின் பேரில் புகைப்படம், செல்போன் எண் ஆகியவற்றை வாங்கி உள்ளார். இதையடுத்து அன்று இரவு அந்த பெண்ணிற்கு தலைமை காவலர் ராஜேந்திரன் செல்போனில் தொடர்பு கொண்டு தகாத முறையில் பேசி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதேபோன்று அவர் அந்த பெண்ணிற்கு 2 முறை தொடர்ந்து செல்போனில் பேசியதாக தெரிகிறது. இதுகுறித்து திருவண்ணாமலை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அந்த பெண் புகார் மனு அளித்தார். தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின்பேரில் தலைமை காவலர் ராஜேந்திரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.


Next Story