தலைமை ஆசிரியர்கள் கூட்டம்
தலைமை ஆசிரியர்கள் கூட்டம்
திருவாரூர்
நீடாமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஒன்றிய தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. வட்டார கல்வி அலுவலர் சம்பத் தலைமை தாங்கினார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் சத்யா முன்னிலை வகித்தார். கூட்டத்தில், பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளி வளாகம், குடிநீர், கழிவறை பள்ளி கட்டிடங்கள் தூய்மை, வகுப்பறை தூய்மை ஆகியவற்றில் ஆசிரியர்கள் தனி கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகள் அனைவரையும் அரசு பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மூலம் வழங்கப்பட்டுள்ள நோட்டு- புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கி கற்றல் கற்பித்தல் மேம்பாடு அடைய செய்தல் வேண்டும் உள்ளிட்டவை குறித்து வலியுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர்கள் இளையராஜா, வேலுசாமி, ராதிகா மற்றும் ஒன்றிய அளவிலான பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story