மருத்துவத்துறையை மேம்படுத்துவது குறித்த சுகாதார பேரவைக்கூட்டம்


மருத்துவத்துறையை மேம்படுத்துவது குறித்த சுகாதார பேரவைக்கூட்டம்
x
தினத்தந்தி 5 Jan 2023 12:15 AM IST (Updated: 5 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் மருத்துவத்துறையை மேம்படுத்துவது குறித்த சுகாதார பேரவைக்கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையை மேம்படுத்துவது குறித்த மாவட்ட சுகாதார பேரவைக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். துரை.ரவிக்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலெக்டர் மோகன் கூறியதாவது:-

பொது சுகாதாரம் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருந்தாலும், பொது சுகாதாரத்தின் சேவைகள் மிக பயனுள்ளதாக இருக்க வேண்டுமானால், சமுதாயத்தின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்க வேண்டும். அதனடிப்படையில் அனைத்து குடிமக்களும் தங்களுடைய உரிமைகள், கடமைகளை பற்றிய புரிந்துணர்வை மேம்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் மாநில, மாவட்ட மற்றும் வட்டார அளவிலான சுகாதார பேரவைக்கூட்டம் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

உட்கட்டமைப்பு வசதிகள்

இக்கூட்டத்தில் பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ வசதி, மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகள் குறித்தும் ஆக்கப்பூர்வமாக விவாதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவிலான கூட்டத்தில் மட்டுமல்லாமல் வட்டார அளவிலான கூட்டத்திலும் பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள் ஆக்கப்பூர்வமான மருத்துவ துறைக்கு தேவையான வசதிகள், உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து விவாதிக்க வேண்டும். அப்போதுதான் சுகாதார பேரவைக்கூட்டத்தின் நோக்கம் நிறைவேறுவதற்கு பயனுள்ளதாக இருந்திடும்.

இக்கூட்டத்தொடர் மூலமாக வட்டார அளவில் பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ தேவைகள், மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அதுதொடர்பான அறிக்கைகள் மாவட்ட அளவில் கலந்தாய்வு மேற்கொண்டு மாநில அளவிலான குழுவிற்கு அனுப்பி வைத்து தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

கண்காட்சி

அதனை தொடர்ந்து காசநோய் திட்டம், தேசிய தொழுநோய் திட்டம், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு மற்றும் பொது சுகாதாரத்துறையின் மூலமாக அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை கலெக்டர் மோகன் பார்வையிட்டார்.

இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சித்ரா விஜயன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், நகரமன்ற தலைவர்கள் தமிழ்ச்செல்வி, ஜெயமூர்த்தி, விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் குந்தவிதேவி, துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) பொற்கொடி மற்றும் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story