கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்
கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் ஒன்றியம் தேவரம்பூர் கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார். திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சண்முகவடிவேல், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் நாகநாதன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பள்ளத்தூர் ரவி முன்னிலை வகித்தனர். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் முகாமை தொடங்கி வைத்து, விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். தொடர்ந்து 96 விவசாயிகளுக்கு ரூ.12.27 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.
நிகழ்ச்சியில், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் வேங்கைமாறன், ஒன்றிய செயலாளர்கள் குன்றக்குடி சுப்பிரமணியன், டாக்டர் ஆனந்த், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் விஜயகுமார், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் கண்ணன், ஒன்றிய கவுன்சிலர் சகாதேவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.