சுகாதார விழிப்புணர்வு ஊர்வலம்


சுகாதார விழிப்புணர்வு ஊர்வலம்
x

சீர்காழி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் சுகாதார விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது

மயிலாடுதுறை

சீர்காழி:

சீர்காழி அருகே திட்டை ஊராட்சியில் நம்ம ஊரு சூப்பர் திட்டத்தின் கீழ் சுகாதார விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்துக்கு ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் விஜயராணி முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் அன்பரசன் வரவேற்றார். ஊர்வலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் ஊராட்சி முழுவதும் சென்றது. இதில் ஊராட்சியை சுகாதாரமாகவும், தூய்மையாகவும் வைத்துக்கொள்ள வேண்டுமென என விழிப்புணர்வு வலியுறுத்தப்பட்டன. ஊர்வலத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பணிதள பொறுப்பாளர்கள், மக்கள் நல பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் உள்ளிட்ட பல கலந்து கொண்டனர். இதே போல் எடக்குடி வடபாதி ஊராட்சியில் நடந்த விழிப்புணர்வு ஊர்வலத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சம்மாள் மணி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் நந்தகோபால் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார். இதில் அங்கன்வாடி பணியாளர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். செம்மங்குடி ஊராட்சியில் தலைவர் அசோகன் தலைமையிலும், அகனி ஊராட்சியில் தலைவர் மதியழகன் தலைமையிலும், வள்ளுவகுடி ஊராட்சியில்தலைவர் பத்மா தலைமையிலும், நிம்மேலி ஊராட்சியில் தலைவர் வசந்தி கிருபாகரன் தலைமையிலும், கொண்டல் ஊராட்சியில் தலைவர் விஜயின் தலைமையிலும் சுகாதார விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.



Next Story