சுகாதார பேரவை கூட்டம்
திருமருகலில் சுகாதார பேரவை கூட்டம்
திட்டச்சேரி:
திருமருகல் வட்டார பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் வட்டார சுகாதார பேரவை கூட்டம் நேற்று திருமருகலில் நடந்தது. கூட்டத்திற்கு வட்டார மருத்துவ அலுவலர் மணிசுந்தரம் தலைமை தாங்கினார். மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு வல்லுனர் லியாக்கத் அலி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஜவகர், திட்டச்சேரி பேரூராட்சி மன்ற தலைவர் ஆயிஷா சித்திக்கா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. பேரவை கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட நலக்கல்வியாளர் மணவாளன் வரவேற்றார். திருமருகல் ஒன்றியத்தில் மகப்பேறு உயிர் இழப்புகள் இல்லாமல் சிறப்பாக செயல்படுவது, டெங்கு உள்ளிட்ட மர்ம காய்ச்சலுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செயல்படுத்தி காய்ச்சல் இல்லா ஒன்றியத்தை உருவாக்குவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இதில் திட்டச்சேரி பேரூராட்சி மன்ற உறுப்பினர் முகமது சுல்தான், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (திட்டம்) சுகுமாறன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கற்பகம் நன்றி கூறினார்.