சுகாதார பேரவை கூட்டம்
மயிலத்தில் சுகாதார பேரவை கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் பங்கேற்பு
மயிலம்
மயிலம் வட்டார அளவிலான சுகாதார பேரவை கூட்டம் மயிலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது. இதற்கு விழுப்புரம் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பொற்கொடி தலைமை தாங்கினார். மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பந்தம், மருத்துவ அலுவலர் டாக்டர் தேன்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார ஆய்வாளர் துரைசாமி வரவேற்றார். மயிலம் ஒன்றியக்குழு தலைவர் யோகேஸ்வரி மணிமாறன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். மயிலம் ஒன்றியத்தில் கிராமங்கள் தோறும் சுகாதார குழுக்கள் அமைத்து மக்களிடம் குறைகளை கண்டறிந்து சுகாதாரத்தை மேம்படுத்துவது குறித்தும், ஒன்றிய அளவில் சுகாதார குழுக்களை ஒருங்கிணைத்து அவர்களிடம் இருந்து பெறப்படும் அறிக்கையை மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் மயிலம் ஒன்றிய கவுன்சிலர் செல்வகுமார், ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர், தலைமை ஆசிரியர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.