குத்தாலம் பகுதிகளில் சுகாதாரத்துறையினர் சோதனை
குத்தாலம் பகுதிகளில் சுகாதாரத்துறையினர் சோதனை புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்தனர்
மயிலாடுதுறை
குத்தாலம்:
குத்தாலம் பகுதிகளில் உள்ள கடைகளில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அமிர்தகுமார் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் சோதனை மேற்கொண்டனர். அப்போது சில கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. அந்த புகையிலை பொருட்களை சுகாதாரத்துறையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கடைகளில் விற்பனை செய்யப்படும் உப்புகளில் அயோடின் உள்ளதா? என சோதனை செய்தனர். அப்போது அயோடின் இல்லாத உப்பு பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். பின்னர் சுகாதாரத்துறை வழிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story