சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

வலங்கைமானில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்

வலங்கைமான்;

வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வட்டாரத் தலைவர் மனோகரன் தலைமை தாங்கினாா். அரசு ஊழியர் சங்க மாவட்ட இணை செயலாளர் ராஜசேகர், வட்டத் தலைவர் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழக அரசு தற்போது செயல்படுத்த இருக்கும் அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு காலி சிற்றுண்டி வழங்கும் திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களிடம் மதிய உணவு வழங்கும் சத்துணவு ஊழியர்கள் சாவி வழங்க வேண்டும் என அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷம் எழுப்பினர். முடிவில் வட்டாரத் துணைத் தலைவர் தெய்வரதி நன்றி கூறினார்.


Next Story