சுகாதாரத்துறை அலுவலர் சங்க கூட்டம்


சுகாதாரத்துறை அலுவலர் சங்க கூட்டம்
x
தினத்தந்தி 22 Jan 2023 12:15 AM IST (Updated: 22 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

குற்றாலத்தில் சுகாதாரத்துறை அலுவலர் சங்க கூட்டம் நடந்தது.

தென்காசி

பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்கம் மற்றும் தமிழ்நாடு பல்நோக்கு சுகாதார பணியாளர் நலச்சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம், சிறப்பு கருத்தரங்கம், இணைப்பு விழா ஆகிய முப்பெரும் விழா குற்றாலத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்க மாநில துணைத்தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். துணை பொதுச்செயலாளர் மோகனமூர்த்தி வரவேற்றார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க துணை பொதுச்செயலாளர் வெங்கடேசன் தொடக்க உரையாற்றினார். தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் கங்காதரன், மாவட்ட தலைவர் ராஜூ, பொதுச் செயலாளர் லட்சுமி நாராயணன், பொருளாளர் செந்தில்குமார், அமைப்பு செயலாளர் கண்ணப்பன் உள்ளிட்டோர் பேசினார்கள்.

கூட்டத்தில், சுகாதார ஆய்வாளர்கள் பணி நியமனத்தில் நிரந்தர பணியிடங்களை உருவாக்கி பணி வழங்க வேண்டும், உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் 7-11-2018 முன் தேதியிட்ட வட்டார சுகாதார ஆய்வாளர் பதவி உயர்வை அனைவருக்கும் வழங்க வேண்டும், காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் நிலை-1 பணியிடங்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்கிட வேண்டும். எம்.டி.எம். சுகாதார ஆய்வாளர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும், ஒரு துணை சுகாதார நிலையத்துக்கு ஒரு சுகாதார ஆய்வாளர் என்ற அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாநில செயலாளர் கணேசன் நன்றி கூறினார்.


Next Story