கல் குவாரி அமைக்க கருத்துகேட்பு கூட்டம்


கல் குவாரி அமைக்க கருத்துகேட்பு கூட்டம்
x

க.பரமத்தி பகுதியில் கல் குவாரி அமைக்க கருத்துகேட்பு கூட்டம் நடைபெற்றது. இதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

கரூர்

கருத்து கேட்பு கூட்டம்

கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே உள்ள குப்பம் பகுதியில் புதிதாக 4 கல் குவாரிகள் அமைக்க கருத்து கேட்பு கூட்டம் நேற்று குப்பத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கரூர் கோட்டாட்சியர் கண்ணன் தலைமை தாங்கினார். கரூர் மாவட்ட சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் ஜெயலட்சுமி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் பெரும்பாலான பொதுமக்கள் இந்த பகுதியில் கல்குவாரி அமைத்தால் எங்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் ஊராட்சிக்கு வருவாய் அதிகம் கிடைக்கும், அதனால் பல நன்மைகள் கிடைக்கும் என ஆதரவு தெரிவித்தனர்.

எதிர்ப்பு

சமூக ஆர்வலர் முகிலன் உள்பட சிலர் இந்த பகுதியில் கல்குவாரி அமைந்தால் நிலநடுக்கம், வெயிலின் தாக்கம் அதிகரிக்கும், தீமைகள் பல நடக்கும் எனவே குவாரி அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார். இதில், கல்குவாரி உரிமையாளர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கருத்து கேட்பு கூட்டத்தையொட்டி க.பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Next Story