குழந்தைகளுக்கான இதய பரிசோதனை முகாம்
குழந்தைகளுக்கான இதய பரிசோதனை முகாம்
ஊட்டி
ஊட்டி அரசு செவிலியர் பயிற்சி பள்ளி வளாகத்தில், மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு சேவைகள் மையம், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் பொது சுகாதாரத்துறையின் பள்ளி குழந்தைகள் நலத்திட்டத்தின் சார்பில் குழந்தைகளுக்கான சிறப்பு இதய பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதை மாவட்ட கலெக்டர் அம்ரித் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசும்போது, நீலகிரி மாவட்டத்தில் உள்ள பொது சுகாதாரத்துறையின் பள்ளி குழந்தைகள் நலத்திட்டத்தின் 8 குழுக்கள் மூலம் பிறந்த குழந்தைகள் முதல் 19 வயது வரை உள்ள மாணவர்களை பரிசோதனை செய்ததில் 237 பேருக்கு இதய பிரச்சினைகளுக்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனர். இந்த முகாமில் எக்கோ பரிசோதனை மூலம் இதய பிரச்சினைகள் உறுதி செய்யப்பட்டு தேவைப்படும் குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்படுகிறது. என்றார்.
முகாமில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டீன் மனோகரி, துணை இயக்குனர்(சுகாதார பணிகள்) பாலுசாமி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தேவகுமாரி, இதய நோய் மருத்துவ நிபுணர்கள் முத்துக்குமரன், சரண்யா, குழந்தைகள் நல டாக்டர்கள் உமாதேவி, நளினி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.