தூத்துக்குடியில்இருதய நோய் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்


தூத்துக்குடியில்இருதய நோய் குறித்த   விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 30 Sept 2022 12:15 AM IST (Updated: 30 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில்இருதய நோய் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இருதய பிரிவு சார்பில் உலக இருதய தினத்தை முன்னிட்டு, இருதய நோய் மற்றும் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. பேரணிக்கு கல்லூரி முதல்வர் கலைவாணி தலைமை தாங்கி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி முன்னிலை வகித்தார். இருதய சிகிச்சை பிரிவு டாக்டர் பாலமுருகன் வரவேற்று பேசினார். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் அரசு ஆஸ்பத்திரியை வந்தடைந்தது. அப்போது ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் வினியோகம் செய்தனர்.

நிகழ்ச்சியில் மருத்துவ கண்காணிப்பாளர் ததேயுஸ், துணை கண்காணிப்பாளர் குமரன், டாக்டர்கள் ராஜவேல் முருகன், சரவணன், பாரத் உள்பட பலர் கலந்து கொண்டனர். டாக்டர் கணேசன் நன்றி கூறினார்.


Next Story