நெல்லை ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு


நெல்லை ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
x

‘அக்னிபத்’ திட்டத்துக்கு எதிர்ப்பு எதிரொலியாக, நெல்லை ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

திருநெல்வேலி

நெல்லை:

ராணுவத்தில் 4 ஆண்டு பணி ஆள் சேர்ப்புக்கான 'அக்னிபத்' திட்டத்துக்கு எதிராக வடமாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ரெயில்களுக்கு தீவைப்பு, துப்பாக்கி சூடு சம்பவமும் நடந்தது. இந்த போராட்டம் பல மாநிலங்களில் பரவி வரும் நிலையில் நாடு முழுவதும் ரெயில் நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. இதையொட்டி நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


Next Story