எதிர்பாராத மழையால் விவசாயிகள் பாதிப்பு


எதிர்பாராத மழையால் விவசாயிகள் பாதிப்பு
x

தஞ்சை மாவட்டத்தில் எதிர்பாராத மழையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளால் இழப்பீடு வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

தஞ்சாவூர்


தஞ்சை கணபதி நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்டக்குழு அலுவலகத்தில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. இதற்கு செயற்குழு உறுப்பினர் செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சின்னை.பாண்டியன் தீர்மானங்களை முன் மொழிந்து பேசினார். கூட்டத்தில் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி கலந்து கொண்டு பேசினார்.கூட்டத்தில், தஞ்சை மாவட்டத்தில் எப்போதும் இல்லாத வகையில் தற்போது பெய்யும் திடீர் மழை காரணமாக மெலட்டூர், பாபநாசம், திருவிடைமருதூர், கொத்தங்குடி, அன்னத்தோட்டம், புலவர்நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்து அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் மழை நீரில் சாய்ந்து சேதமடைந்துள்ளது.கொள்ளிடம் ஆற்றில் செல்லும் தண்ணீர் காரணமாக ஆச்சனூர், மருதூர், வடுகக்குடி உள்ளிட்ட கொள்ளிடம் கரையோர கிராமங்களில் வாழைத்தோட்டங்களில் தண்ணீர் புகுந்ததால் 200-க்கும் மேற்பட்ட ஏக்கர் வாழை மரங்கள் தண்ணீரில் மூழ்கி அழுக தொடங்கி உள்ளது. மேலும், சோளம், கரும்பு உள்ளிட்ட ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிர் செய்யப்பட்டிருந்த சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.இந்த ஆண்டு பயிர்க்காப்பீடும் இல்லாத நிலையில், விவசாயிகள் கடன் பெற்று ஏக்கருக்கு ரூ.25 ஆயிரத்திற்கும் மேல் செலவு செய்து விவசாயம் செய்துள்ளனர். எனவே, தமிழகஅரசும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக கணக்கெடுப்பு நடத்தி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story