2 மணி நேரம் சாரல் மழை
வெம்பக்கோட்டை பகுதிகளில் 2 மணி நேரம் சாரல் மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை பகுதிகளில் 2 மணி நேரம் சாரல் மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
வெயிலின் தாக்கம்
வெம்பக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்தது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர சிரமப்பட்டனர். இந்தநிலையில் நேற்று காலையும் வழக்கம் போல் வெயில் வாட்டி வதைத்து.
இதையடுத்து மாலை 4 மணி அளவில் லேசான மழை பெய்ய தொடங்கியது. மாலை 6 மணி வரை பெய்த சாரல் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. ஒரு சில இடங்களில் மாலை 6 மணிக்கும் மேலும் மழை பெய்தது.
சாரல் மழை
வெம்பக்கோட்டை ஒன்றியம் துலுக்கன்குறிச்சி, அலமேலுமங்கைபுரம், குகன் பாறை, கஸ்தூரி ரெங்காபுரம், முக்கூட்டு மலை, சிப்பிப்பாறை, சத்திரம், சேர்வைக்காரன்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பலத்த இடியுடன் சாரல் மழை பெய்தது. சூறாவளி காற்று வீசியதால் துலுக்கன் குறிச்சி மெயின்ரோட்டில் கடைகளுக்கு முன்பாக இருந்த விளம்பர போர்டுகள் காற்றில் பறந்தன.
புழுதி காற்றும் வீசியதால் மெயின் ரோட்டில் வியாபாரிகள் கடையின் கதவுகளை மூடினர்.
மின் இணைப்பு துண்டிப்பு
தற்போது இந்த பகுதிகளில் விவசாயிகள் உழவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்ேபாது ெபய்யும் மழை விவசாயத்திற்கு நல்லது என மகிழ்ச்சியுடன் விவசாயிகள் கூறினர். முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் சிரமப்பட்டனர்.
பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பிய மாணவர்கள் மழையில் நனைந்தனர்.