அய்யம்பேட்டை, பாபநாசம் பகுதிகளில் பலத்த மழை


அய்யம்பேட்டை, பாபநாசம் பகுதிகளில் பலத்த மழை
x

அய்யம்பேட்டை, பாபநாசம் பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தஞ்சாவூர்

அய்யம்பேட்டை:

அய்யம்பேட்டை, பாபநாசம் பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சுட்டெரிக்கும் வெயில்

அய்யம்பேட்டை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக அக்னி நட்சத்திர காலத்தை போன்று வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இரவு நேரங்களிலும் வெப்பத்தின் தாக்கத்தால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.

இப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்துள்ளனர். ஆனால் மேட்டூர் அணை நீர்வரத்து குறைவால் காவிரி மற்றும் கிளை ஆறுகளில் போதுமான அளவு தண்ணீர் திறக்கப்படவில்லை.இதனால் விவசாயிகள் கவலை அடைந்திருந்தனர்.

பலத்த மழை

இந்த நிலையில் அய்யம்பேட்டை பகுதியில் நேற்று மாலை பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. அய்யம்பேட்டை, மாகாளிபுரம், கணபதி அக்ரகாரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பலத்த மழை கொட்டித் தீர்த்தது.

இந்த மழை வளர்ச்சி பருவத்தில் உள்ள குறுவை நெல் பயிர், வாழை, கரும்பு பயிர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்..

பாபநாசம்

அதே நேரத்தில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றின் படுகை பகுதிகளில் நடைபெற்று வரும் செங்கல் சூளை பணிகள மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பாபநாசத்தில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் குளம் போல் தண்ணீர் தேங்கி நின்றது.


Next Story