தஞ்சை மாவட்டத்தில் பரவலாக மழை


தஞ்சை மாவட்டத்தில் பரவலாக மழை
x

தஞ்வை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. மதுக்கூரில் அதிகபட்சமாக 51 மி.மீட்டர் மழை பதிவானது. இந்த மழைக்கு பசுமாடு-கன்று இறந்தது

தஞ்சாவூர்


தஞ்வை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. மதுக்கூரில் அதிகபட்சமாக 51 மி.மீட்டர் மழை பதிவானது. இந்த மழைக்கு பசுமாடு-கன்று இறந்தது.

பரவலாக மழை

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பகலில் வெயில் கொளுத்தினாலும், இரவு நேரத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையினால் பூதலூர் பகுதியில் இளம்பயிர்கள் தண்ணீரில் முழ்கின.நேற்று பகலில் மழை பெய்யாததால் வயல்களில் தேங்கியிருந்த தண்ணீரில் வடிய தொடங்கியது. தஞ்சை மாவட்டத்தில் அதிகபட்சமாக மதுக்கூரில் 51 மில்லிமீட்டர் மழையும், குறைந்தபட்சமாக திருக்காட்டுப்பள்ளியில் 1 மில்லிமீட்டர் மழையும் பெய்து இருந்தது. இந்த மழையின் காரணமாக ஒரு பசுவும், கன்றும் பலியானது.

பேராவூரணி

பேராவூரணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் பலத்த மழை கொட்டித் தீர்த்தது.பலத்த மழையால் பேராவூரணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பகுதிகள் குளிர்ந்த காலநிலை நிலவியது. இந்த மழை, நெல், கடலை, எள், உளுந்து, மற்றும் தென்னை சாகுபடிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர். கடந்த சில மாதங்களாக வாட்டி வதைத்த வெயிலால் குளங்கள், ஏரிகள், வறண்டு காணப்பட்டது, தற்போது பெய்து வரும் மழையால் வறண்ட குளங்கள், ஏரிகளில் தண்ணீர் தேங்க உதவியாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

அய்யம்பேட்டை

அய்யம்பேட்டை பகுதியில் விடிய, விடிய பெய்த பலத்த மழையால் நடவு வயல்கள் தண்ணீரில் மூழ்கின.. அய்யம்பேட்டை பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்தது. இரவு நேரங்களிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொது மக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். நேற்றுமுன்தினம் அய்யம்ேபட்டையில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.அய்யம்பேட்டை, பசுபதிகோவில், சக்கராப்பள்ளி, வழுத்தூர், மாகாளிபுரம், கணபதி அக்ரகாரம், மணலூர், பட்டுக்குடி, பெருமாள் கோவில், உள்ளிக்கடை ஆகிய பகுதிகளில் இரவு தொடங்கிய மழை விடிய, விடிய கொட்டி தீர்த்தது. இதனால் தற்போது நடவு செய்துள்ள குறுவை நெற் பயிர்கள் ஆங்காங்கே தண்ணீரில் மூழ்கின.

வாழைமரங்கள் முறிந்தன

பலத்த மழையால் ஒரு சில இடங்களில் அறுவடைக்கு தயாரான வாழை மரங்களும் முறிந்து விழுந்தது. குறிப்பாக கொள்ளிடம் கரையோர கிராமங்களில் மிக பலத்த மழை கொட்டித் தீர்த்தது.கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு தற்போது கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கி உள்ளது.இந்தநிலையில் தற்போது பெய்த மழையினால் படுகை நிலங்களிலும், கரையோர வயல்களிலும் தண்ணீர் தேங்கி பயிர்கள் மூழ்க தொடங்கி உள்ளது. இந்த பகுதியில் தற்போது தான் இறுதி கட்ட குறுவை நடவு பணிகள் நடைபெற்று வருகிறது. மழை தொடர்ந்தால் குறுவை பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்படும் என விவசாயிகள் கவலையுடன் கூறினர்.

மழைஅளவு

தஞ்சை மாவட்டத்தில் நேற்றுகாலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழைஅளவு மில்லிமீட்டரில் வருமாறு:-மதுக்கூர்-51, பட்டுக்கோட்டை-45, அணைக்கரை-36, பேராவூரணி-35, நெய்வாசல்தென்பாதி-32, பாபநாசம்-27, வல்லம்-23, அதிராம்பட்டினம்-19, அய்யம்பேட்டை-18, ஈச்சன்விடுதி-10, வெட்டிக்காடு-7, தஞ்சை-5, குருங்குளம்-3, கும்பகோணம்-3, ஒரத்தநாடு-3, பூதலூர்-2, திருவிடைமருதூர்-2, மஞ்சளாறு-1, திருக்காட்டுப்பள்ளி-1.இந்த ஆண்டு இதுவரை 377 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.


Next Story