கூடலூர் பகுதியில் விடிய விடிய பலத்த மழை: மரங்கள் விழுந்து மின் கம்பிகள் சேதம்- போக்குவரத்து பாதிப்பு

கூடலூர் பகுதியில் விடிய விடிய பலத்த மழை:  மரங்கள் விழுந்து மின் கம்பிகள் சேதம்- போக்குவரத்து பாதிப்பு
x

கூடலூர் பகுதியில் விடிய விடிய தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் மின் வினியோகமும் தடைப்பட்டது.

நீலகிரி

கூடலூர்

கூடலூர் பகுதியில் விடிய விடிய தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் மின் வினியோகமும் தடைப்பட்டது.

மரம் முறிந்து மின் கம்பிகள் அறுந்தது

கூடலூர் தாலுகா பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் தொடங்கி விடிய விடிய பலத்த மழை பெய்தது. அப்போது காலை 8 மணிக்கு கூடலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் இருந்து ஹெல்த் கேம்ப் செல்லும் சாலையோரம் காய்ந்த மரம் ஒன்று வேருடன் சரிந்து விழுந்தது.

இதனால் அந்த வழியாக சென்ற மின் கம்பிகள் அறுந்து விழுந்து மின்வினியோகம் துண்டிக்கப்பட்டது. மேலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து வேறு பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டது. தகவல் அறிந்த மின்வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து மின் கம்பிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். பல கட்ட நடவடிக்கைக்கு பிறகு காலை 11 மணிக்கு மின்விநியோகம் சீரானது.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு

இதேபோல் கூடலூர் எம் ஜி.ஆர். நகரில் இருந்து கொல்லி வயல் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர். இருப்பினும் மீட்பு நடவடிக்கைகள் எடுக்க எந்த துறையினரும் வராததால் அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். கூடலூர் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கடும் குளிர் நிலவுகிறது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

Next Story