ஏழாயிரம்பண்ணை பகுதியில் பலத்த மழை


ஏழாயிரம்பண்ணை பகுதியில் பலத்த மழை
x

ஏழாயிரம்பண்ணை பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டது.

விருதுநகர்

தாயில்பட்டி,

ஏழாயிரம்பண்ணை பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டது.

பலத்த மழை

ஏழாயிரம்பண்ணை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக ெதாடர்ந்து கடும் வெயில் அடித்து வந்தது. இந்தநிலையில் நேற்று மதியம் 2 மணி அளவில் ஏழாயிரம் பண்ணை, சிவசங்குபட்டி, புல்லகவுண்டன்பட்டி, ஜெகவீரம்பட்டி, கண்ண குடும்பன்பட்டி, விளா மரத்துப்பட்டி, கண்டியாபுரம், கீழசெல்லையாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் பலத்த மழை பெய்தது. இப்பகுதியில் சித்திரைத்திருவிழா நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் திடீரென பெய்த மழையினால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பட்டாசு உற்பத்தி பாதிப்பு

தொடர்ந்து 1 மணி நேரம் மழை பெய்ததால் பட்டாசு ஆலையில் உற்பத்தி நிறுத்தப்பட்டு பட்டாசு ஊழியர்கள் வாகனங்களில் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டது.

இந்த மழை விவசாயத்திற்கு மிகவும் நல்லது. இவ்வாறு மழை தொடர்ந்து பெய்தால் கத்தரிக்காய், வெண்டைக்காய் ஆகிய பயிர்களின் விளைச்சல் நன்றாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறினர்.


Next Story