கடம்பூர் பகுதியில் கனமழை:தரைப்பாலத்தை வெள்ளம் மூழ்கடித்ததால் மலைகிராமம் துண்டிப்புஆபத்தை உணராமல் காட்டாற்றை கடந்த பொதுமக்கள்


கடம்பூர் பகுதியில் கனமழை:தரைப்பாலத்தை வெள்ளம் மூழ்கடித்ததால் மலைகிராமம் துண்டிப்புஆபத்தை உணராமல் காட்டாற்றை கடந்த பொதுமக்கள்
x

கடம்பூர் பகுதியில் பெய்த கனமழையால் தரைப்பாலத்தை வெள்ளம் மூழ்கடித்தது. இதனால் மலைகிராமம் துண்டிக்கப்பட்டது. ஆபத்தை உணராமல் காட்டாற்றை பொதுமக்கள் கடந்தனர்.

ஈரோடு

டி.என்.பாளையம்

கடம்பூர் பகுதியில் பெய்த கனமழையால் தரைப்பாலத்தை வெள்ளம் மூழ்கடித்தது. இதனால் மலைகிராமம் துண்டிக்கப்பட்டது. ஆபத்தை உணராமல் காட்டாற்றை பொதுமக்கள் கடந்தனர்.

கனமழை

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மாலை நேரங்களில் கோடை மழை பெய்து வருகிறது. குறிப்பாக அந்தியூர், பர்கூர், அம்மாபேட்டை, நம்பியூர், தாளவாடி பகுதிகளில் நாள்தோறும் மாலை தொடங்கி இரவு வரை கனமழை பெய்கிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை கடம்பூர் மலை பகுதியில் சுமார் 2 மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது. இங்கு பெய்யும் மழை நீர் அப்படியே சர்க்கரை பள்ளத்துக்கு வந்து சேறும். அதுபோன்ற நேரங்களில் சர்க்கரை பள்ளத்தில் திடீரென காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடும்.

மலை கிராமம் துண்டிப்பு

அதுபோல் நேற்று முன்தினம் பெய்த மழையிலும் சர்க்கரை பள்ளத்தில் காட்டாற்று வெள்ளம் சீறிப்பாய்ந்து ஓடியது. இதனால் கடம்பூரில் இருந்து குரும்பூருக்கு யாரும் செல்ல முடியவில்லை. அங்கு இருக்கும் பொதுமக்களும் காட்டாற்றை கடந்து கடம்பூருக்கு வரமுடியவில்லை. மலைகிராமமே நேற்று முன்தினம் மாலையில் இருந்து துண்டிக்கப்பட்டது.

சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் வழியாக குரும்பூர் மாக்கம்பாளையம் வரை நாள்தோறும் ஒரு அரசு பஸ் இயக்கப்படுகிறது.

பஸ் பயணிகள் காத்திருப்பு

இந்தநிலையில் காட்டாற்று வெள்ளத்தை கடக்க முடியாது என்பதால் அரசு பஸ் கடம்பூரிலேயே பயணிகளை இறக்கிவிட்டு சென்றுவிட்டது. பஸ்சில் வந்த பயணிகள் வெள்ளம் எப்போது வடியும் என்று காத்திருந்தார்கள். பஸ் போக்குவரத்து அந்த வழியாக குறைவு என்பதால் பெரும்பாலானோர் இருசக்கர வாகனங்களையே பயன்படுத்துகிறார்கள்.

நேற்று அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் வந்த பலர் ஆபத்தை பொருட்படுத்தாமல் வாகனத்தை தள்ளிக்கொண்டே காட்டாற்றை கடந்து சென்றனர். அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இவ்வாறு இருசக்கர வாகனத்துடன் காட்டாற்றை கடப்பவர்களுக்கு உதவுகிறார்கள்.

உயர்மட்ட பாலம்

இதுபற்றி குரும்பூர் பகுதி மக்கள் கூறும்போது, 'குரும்பூரில் சுமார் 50 குடும்பத்தினர் வசிக்கிறோம். சர்க்கரை பள்ளத்தில் காட்டாற்று வெள்ளம் செல்லும்போதெல்லாம் எங்கள் கிராமம் துண்டிக்கப்பட்டு விடுகிறது. ஆபத்து என்று தெரிந்துமே வேறு வழியில்லாமல் காட்டாற்ைற கடந்து செல்கிறோம். இல்லை என்றால் வெள்ளம் வடியும் வரை நாள் கணக்கில் காட்டு பகுதியிலேயே காத்திருக்கவேண்டும். எனவே அரசு சர்க்கரை பள்ளத்தில் உயர்மட்ட பாலம் கட்டித்தரவேண்டும்' என்றனர்.


Next Story