காரைக்குடி பகுதியில் பலத்த மழை
காரைக்குடி பகுதியில் பலத்த மழை பெய்தது.
காரைக்குடி,
சிவகங்கை மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதையொட்டி காரைக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான குன்றக்குடி, சாக்கோட்டை, புதுவயல், பள்ளத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலும் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இந்நிலையில் நேற்றும், நேற்று முன்தினமும் இந்த பகுதியில் பலத்த மழை பெய்ததால் விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக காரைக்குடி நகர் முழுவதும் சாலையோரத்தில் பூ, பழம், தேங்காய், பொறி உள்ளிட்ட பொருட்களை வைத்து வியாபாரம் செய்த வியாபாரிகளின் விற்பனை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதேபோல் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சாலையோரத்தில் சிறிய விநாயகர் சிலைகள் வைத்து விற்பனை செய்த நடைபாதை வியாபாரிகளின் வியாபாரமும் கன மழை காரணமாக பாதிக்கப்பட்டதால் அவர்கள் கவலையடைந்தனர்.