கூத்தாநல்லூர், திருமக்கோட்டை பகுதிகளில் பலத்த மழை
கூத்தாநல்லூர், திருமக்கோட்டை பகுதிகளில் பலத்த மழை
கூத்தாநல்லூர்
கூத்தாநல்லூர் மற்றும் வடபாதிமங்கலம் பகுதியில் நேற்று காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மாலை 5 மணியளவில் இடி, மின்னலுடன் பலத்த காற்று வீசியது. இதையடுத்து லேசான தூறலுடன் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து பலத்த மழை பெய்தது. கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம், பழையனூர், நாகங்குடி, லெட்சுமாங்குடி, மரக்கடை, கோரையாறு, குடிதாங்கிச்சேரி, பொதக்குடி, பூதமங்கலம், வடகோவனூர், தென்கோவனூர், ஓவர்ச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளிலும், சாலைகளிலும், வயல்களிலும் மழைநீர் தேங்கி நின்றது.
திருமக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் கடலை, உளுந்து பயிரிட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பயிர் அழுகும் நிலையில் உள்ளதால் அதற்கு நிவாரணம் தர விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.