கூத்தாநல்லூர் பகுதியில் பலத்த மழை


கூத்தாநல்லூர் பகுதியில் பலத்த மழை
x
தினத்தந்தி 10 May 2023 12:15 AM IST (Updated: 10 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கூத்தாநல்லூர் பகுதியில் பலத்த மழை பருத்தி விவசாயிகள் வேதனை

திருவாரூர்

கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூர் மற்றும் வடபாதிமங்கலம் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் அடிப்பதும், வானம் மேகமூட்டம் சூழ்ந்து காணப்படுவதுமாக உள்ளது. இந்த நிலையில் நேற்று காலை முதலே கடுமையான வெயில் சுட்டெரித்தது. இதனையடுத்து மாலை திடீரென வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது. முதலில் லேசான தூறலுடன் தொடங்கிய மழை பின்னர் பலத்த மழையாக பெய்தது. கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி, பொதக்குடி, வக்ராநல்லூர், வேளுக்குடி, ஓகைப்பேரையூர், வடபாதிமங்கலம், குலமாணிக்கம், ராமநாதபுரம், நாகங்குடி, பழையனூர், ஓவர்ச்சேரி, பூந்தாழங்குடி, கார்நாதன்கோவில், திருராமேஸ்வரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும் மழை பெய்தது. அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாளில் இருந்தே அடிக்கடி மழை பெய்து வருவதால் கூத்தாநல்லூர் மற்றும் வடபாதிமங்கலம் பகுதியில் பருத்தி பயிரிட்டுள்ள விவசாயிகள் கவலையில் உள்ளனர்.


Next Story