கூத்தாநல்லூர் பகுதியில் 3-வது நாளாக பலத்த மழை
கூத்தாநல்லூர் பகுதியில் 3-வது நாளாக பலத்த மழை பெய்ததால் சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.
கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூர் பகுதியில் 3-வது நாளாக பலத்த மழை பெய்ததால் சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.
குறுவை சாகுபடி
இந்த ஆண்டு கடந்த மே மாதம் 24-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டனர்.
அதன்படி, திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் மற்றும் வடபாதிமங்கலம் பகுதியில் அப்பகுதியில் குறுவை நெற்பயிர்கள் நல்ல விளைச்சல் ஏற்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்து அப்போது பெய்த நிலையில் தொடர் மழையால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. பின்னர் வெயில் அடித்தால் சாய்ந்த நெற்பயிர்களை விவசாயிகள் அறுவடை செய்தனர்.
நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின
பின்னர், ஈரப்பதம் கொண்ட நெல்மணிகளை தளங்களிலும், சாலைகளிலும் கொட்டி காய வைத்தனர். அதிக ஈரப்பதம் அடைந்த நெல்களை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தற்போது சம்பா நடவு பணிகளை விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம் பகுதியில் 3-வது நாளாக நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் பல இடங்களில் நடவு பணிகள் பாதிக்கப்பட்டது. சில இடங்களில் சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. வயல்களில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர்.