ஊட்டி, கூடலூர் பகுதியில் பலத்த மழை: மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு-தடுப்புச்சுவர் இடிந்து விழுந்து கார் சேதம்
ஊட்டி, கூடலூர் பகுதியில் பலத்த மழை தொடர்வதால் சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. தடுப்புச்சுவர் இடிந்து விழுந்து கார் சேதமானது.
கூடலூர்
ஊட்டி, கூடலூர் பகுதியில் பலத்த மழை தொடர்வதால் சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. தடுப்புச்சுவர் இடிந்து விழுந்து கார் சேதமானது.
மரங்கள் விழுந்தன
ஊட்டியில் கடந்த 15 நாட்களக மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் மக்கள் அன்றாட வாழ்க்கை பாதித்து உள்ளது இந்த நிலையில் ஊட்டி நகர் பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த மழைக்கு அடுத்தடுத்து மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் ஊட்டி - கூடலூர் சாலையில் காமராஜர் சாகர் அணை அருகே சாலையின் குறுக்கே மரம் விழுந்தது. அதைப்போல், கிளன்மார்கன் சாலை, பார்சன்ஸ் வேலி சாலைகளில் ஆங்காங்கே சாலை ஓர மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஊட்டி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் பிரேமானந்தா தலைமையில், தீயணைப்பு துறை ஊழியர்கள் சம்பவ பகுதிக்கு சென்று எந்திரவாள் மூலம் மரத்தை அறுத்து அகற்றினார்கள்.
இதேபோல் பார்சல் வேலி சாலையில் நகராட்சி குப்பை கிடங்கு அருகில் பெரிய கற்பூரம் மரம் ஒன்று ரோட்டின் குறுக்கே நள்ளிரவில் விழுந்து போக்குவரத்து தடை ஏற்்பட்டது தகவல் அறிந்த ஊட்டி தீ அணைப்பு பாடவிரர்கள் மரத்தினை எந்திர வாள் மூலம் மரத்தை அறுத்து அப்புறப்படுத்தினா். அதன்பின்னர் போக்குவரத்து சீரானது.
ஊட்டி மார்லி மந்து சாலையில் நகராட்சிக்குட்பட்ட டாக்டர் பசுவய்யா நகர் பகுதியில் பலத்த தொடர்மழை காரணமாக வீட்டின் தடுப்புச் சுவர் இடிந்து விழந்து உள்ளது. இந்த தடுப்பு கவர்அருகில் நிறுத்தப்பட்டிருந்த காரின் மீது தடுப்பு சுவர் இடிந்து விழுந்து கார் சேதமானது.
போக்குவரத்து பாதிப்பு
இதேபோல் கூடலூர். பந்தலூர் தாலுகாகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பைக்காரா பகுதியில் மரம் சரிந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து இரவு முழுவதும் பலத்த மழை பெய்தது.
இந்த நிலையில் கூடலூரில் இருந்து கேரள மாநிலம் சுல்தான் பத்தேரி செல்லும் சாலையில் 4- மைல் பகுதியில் கரையோரம் நின்றிருந்த மூங்கில்கள் சரிந்து விழுந்தது. இதனால் கூடலூர்- கேரளா சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த தாசில்தார் சித்தராஜ், தேவர் சோலை போலீசார் விரைந்து வந்து பொக்லைன் என்கிற உதவியுடன் மூங்கில்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
மூங்கில்கள் அகற்றம்
பின்னர் சுமார் 1.30 மணி நேரத்துக்கு பிறகு மூங்கில்கள் அகற்றப்பட்டது. அதன் பின்னர் இரு மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து சீரானது. இதேபோல் கூடலூர் ஆர்டிஓ அலுவலகத்தின் அருகே உள்ள தனியார் பள்ளிக்கூடத்தின் கரையோரம் ராட்சத மரம் முறிந்து விழுந்தது. இதில் அப்பகுதியில் சென்ற மின் கம்பிகள் சேதமடைந்தது. இதனால் அப்பகுதியில் மின்விநியோகம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து பள்ளிக்கூட கட்டிட சுவரும் உடைந்தது. ஆனால் வேறு ஏதும் பாதிப்பு ஏற்படவில்லை. தொடர்ந்து மழை பெய்வதால் மண் சரிவு ஏற்படும் அபாயம் காணப்படுகிறது.
நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- தேவாலா 103, அவலாஞ்சி - 93, அப்பர் பவானி - 53, கூடலூர், நடுவட்டம்- 49, பந்தலூர்- 47, சேரங்கோடு - 36, கிளன்மார்கன் - 35, செருமுள்ளி- 34, மேல் கூடலூர், பாடந்தொரை - 31, ஓவேலி-30, எமரால்டு - 25.
---
Image1 File Name : 11566901.jpg
----
Reporter : G.ARAVINTHAN_Staff Reporter Location : Coimbatore - GUDALUR