சீர்காழி பகுதியில் கன மழை


சீர்காழி பகுதியில் கன மழை
x
தினத்தந்தி 13 Dec 2022 12:15 AM IST (Updated: 13 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழி பகுதியில் கன மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

மயிலாடுதுறை

சீர்காழி:

சீர்காழி பகுதியில் கன மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

கன மழை

வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. மேலும் கடல் சீற்றமாக காணப்பட்டதால் சீர்காழி, கொள்ளிடம் பகுதிகளில் உள்ள கிராமங்களுக்குள் கடல்நீர் புகுந்தது. புயல் கரையை கடந்ததால் மழை பெய்யவில்லை.இந்த நிலையில் சீர்காழி பகுதியில் நேற்று காலை திடீரென கன மழை பெய்தது. இதன் காரணமாக பழைய பஸ் நிலையம், காமராஜர் வீதி, ஈசானி தெரு, ெரயில்வே ரோடு, புதிய பஸ் நிலையம் வளாகம், தேர் தெற்கு வீதி, வ.உ. சி. தெரு உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் மழை நீர் தேங்கி நின்றது.

வாகன ஓட்டிகள் அவதி

சாலையில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிப்பட்டனர். இதை தொடர்ந்து பழைய பஸ் நிலைய வளாகத்தில் தேங்கி இருந்த மழை நீரை நகராட்சி பணியாளர்கள் அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.இதேபோல் வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் கன மழை பெய்ததால் பஸ் நிலையம், ெரயில்வே ரோடு, கீழத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

இதை தொடர்ந்து பேரூராட்சி பணியாளர்கள் மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கொள்ளிடம்

கொள்ளிடம் ஒன்றிய பகுதிகளில் நேற்று மதியம் 1 மணியில் இருந்து கன மழை பெய்தது. இந்த மழை 3 மணி வரை நீடித்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது.

இந்த மழையை பயன்படுத்தி விவசாயிகள் மறு சாகுபடி பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் திருவெண்காடு உள்பட மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்தது.


Next Story