சீர்காழி பகுதியில் பலத்த மழை


சீர்காழி பகுதியில் பலத்த மழை
x
தினத்தந்தி 30 Jun 2023 12:15 AM IST (Updated: 30 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழி பகுதியில் பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மயிலாடுதுறை

சீர்காழி:

சீர்காழி பகுதியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. இதனால் பொதுமக்கள் பகலில் வெளியே செல்லாமல் வீடுகளில் முடங்கி கிடந்தனர். பகலின் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் இரவிலும் தென்பட்டது. மின்விசிறியில் இருந்து அனல் காற்று வீசியது. பொதுமக்கள் வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள பழங்கள், பழச்சாறு, கரும்பு ஜூஸ், வெள்ளரிக்காய் உள்ளிட்டவைகளை பருகி வந்தனர். இந்த நிலையில் சீர்காழி பகுதியில் நேற்று மாலையில் திடீரென பலத்த மழை பெய்தது. இந்த மழை 2 மணி நேரம் நீடித்தது. இந்த மழையால் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், ஈசானிய தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் காணப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். குறுவை சாகுபடி செய்யப்பட்ட பயிர்களுக்கு இந்த மழை பயன் உள்ளதாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர் ஆனால் பருத்தி விவசாயிகளுக்கும், செங்கல் சூளை தொழிலாளர்களுக்கும் இந்த மழை பாதிப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது


Next Story