தஞ்சையில் பலத்த மழை


தஞ்சையில் பலத்த மழை
x

தஞ்சையில் பலத்த மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தஞ்சாவூர்

தஞ்சையில் கோடைகாலம் முடிந்த பின்னரும் வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. நேற்று காலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் நேற்று மாலையில் மழை பெய்வதற்கான அறிகுறிகள் காணப்பட்டன. இதைத்தொடர்ந்து ஒரு சில பகுதிகளில் மழை பெய்தது. இந்த மழை சுமார் 1 மணி நேரத்திற்கு நீடித்தது.இந்த மழை காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்கள் நனைந்துக்கொண்டும், குடைபிடித்தும் சென்றனர். அண்ணா சிலை, கீழவாசல் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி காணப்பட்டது.மேலும் தஞ்சை மாவட்டத்தில் தற்போது நடவு செய்யப்பட்ட குறுவை நெற்பயிர்கள் தண்ணீர் இன்றி கருகி வரும் நிலையில் தற்போது மழை பெய்யத்தொடங்கி இருப்பது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story