திருப்பத்தூரில் பலத்த மழை
திருப்பத்தூரில் பலத்த மழை காரணமாக கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் பகுதியில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழைபெய்து வருகிறது. நேற்று மாலை திடீரென பலத்த மழை பெய்தது. இதனால் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள கடைகளில் தண்ணீர் புகுந்தது. மழை நின்றபிறகு பக்கெட் மூலம் தண்ணீரை வெளியே எடுத்து ஊற்றினார்கள். பெரிய ஏரி பகுதியிலிருந்து வெளியேறிய கழிவுநீர் கலெக்டர் அலுவலகம் எதிரில், வாணியம்பாடி சாலையில் தேங்கி நின்றது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சிறிய மழை பெய்தாலே அந்த பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. உடனடியாக இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும் மழை காரணமாக புதுப்பேட்டை ெரயில்வே மேம்பாலம் அருகே தண்ணீர் முழங்கால் அளவு தேங்கி நின்றது.
Related Tags :
Next Story