திருவெண்காடு, பூம்புகார் பகுதிகளில் பலத்த மழை
திருவெண்காடு, பூம்புகார் பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
மயிலாடுதுறை
திருவெண்காடு:
மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு மற்றும் பூம்புகார் பகுதியில் நேற்று இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை அரை மணி நேரம் நீடித்தது. இந்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. மழை காரணமாக பூம்புகார் பகுதியில் திடீர் மின் தடை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் மழையையும் பொருட்படுத்தாமல் பழுதடைந்த மின் கம்பிகளை சரி செய்து மின்வினியோகம் வழங்கினர். இதனால் 1½ மணி நேரத்திற்கு பிறகு மின்சாரம் வந்தது. கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் திடீர் மழையால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story