வாணியம்பாடி பகுதியில் பலத்த மழை


வாணியம்பாடி பகுதியில் பலத்த மழை
x

வாணியம்பாடி பகுதியில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று மாலை திடீரென வாணியம்பாடி, அதன் சுற்றியுள்ள பகுதியான மேட்டுப்பாளையம், தும்பேரி, நிம்மியம்பட்டு, ஆலங்காயம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடீரென காற்று, இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.


Next Story