வேலூரில் சாரல் மழை
வேலூரில் சாரல் மழை பெய்தது.
வேலூர்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து வேலூர் மாவட்டத்தில் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் வேலூரில் நேற்று காலை முதலே லேசான சாரல் மழை பெய்தது. இந்த மழை தொடர்ந்து இரவு வரை அவ்வப்போது விட்டு, விட்டு பெய்து கொண்டே இருந்தது.
இதனால் வேலைக்கு சென்றவர்கள், நடந்து சென்ற பாதசாரிகள் குடைகளை பிடித்துக் கொண்டும், பள்ளி, கல்லூரி முடிந்து மாணவ- மாணவிகள் மழையில் நனைந்தபடியும் சென்றதை காணமுடிந்தது.
இருசக்கர வாகன ஓட்டிகள் பலர் மழையில் நனைந்தவாறே சென்றனர். தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் பலர் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர். இரவு முழுவதும் குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story