வேலூரில் சாரல் மழை
வேலூரில் சாரல் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் கோடை காலம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். பகலில் வீட்டை விட்டு வெயியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்தநிலையில் தற்போது வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. நேற்று முன்தினம் 99 டிகிரியாக பதிவாகியது. காலை 9 மணி வரை வானம் மேகமூட்டத்துடனே காணப்பட்டது. பின்னர் லேசான சாரல் மழை பெய்ய தொடங்கியது. இதனால் இதமான சூழல் நிலவியது. பின்னர் நகரின் பல்வேறு பகுதிகளில் லேசான மழையும் பெய்தது. சாலையில் நடந்து செல்பவர்கள் பலர் குடையை பிடித்தபடி சென்றனர். இருசக்கர வாகன ஓட்டிகள் பலர் தலையில் துணியை போட்டுக் கொண்டும், குடையை பிடித்தவாறும் சென்றனர். இந்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story