வேதாரண்யத்தில் பலத்த மழை


வேதாரண்யத்தில் பலத்த மழை
x

வேதாரண்யத்தில் பலத்த மழை பெய்தது. வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யத்தில் பலத்த மழை பெய்தது. வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது.

பலத்த மழை

நாகை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் அறுவடை செய்யப்பட்ட குறுவை நெல் நனைந்து பாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நனைந்த நெல்லை விவசாயிகள் காய வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வேதாரண்யம் பகுதியில் நேற்று அதிகாலை இடியுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை 2 மணி நேரம் நீடித்தது. இதன் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றது.

கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது. கோவில் வளாகத்தில் தண்ணீர் தேங்கி நின்றதால் சாமி தாிசனம் செய்ய சென்ற பக்தர்கள் அவதிப்பட்டனர். சம்பா சாகுபடிக்காக நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்ட வயல்களில் தண்ணீர் தேங்கியதால் நெல் முளைப்பு திறன் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மழையால் அகஸ்தியம்பள்ளியில உப்பு ஏற்றுமதி பணி அடியோடு பாதிக்கப்பட்டது.

மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

மழையின் காரணமாக 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து மீனவர்கள் அதிக அளவில் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்த மழை காரணமாக வேதாரண்யம் பகுதியில் உள்ள குளம், குட்டை, ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி காணப்பட்டது.


Next Story