கடம்பூர் அருகே பலத்த மழை: தரைப்பாலத்தை கடக்க முயன்ற 5 மாடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன


கடம்பூர் அருகே பலத்த மழை:  தரைப்பாலத்தை கடக்க முயன்ற 5 மாடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன
x

கடம்பூர் அருகே பெய்த பலத்த மழையால் தரைப்பாலத்தை கடக்க முயன்ற 5 மாடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

ஈரோடு

டி.என்.பாளையம்

கடம்பூர் அருகே பெய்த பலத்த மழையால் தரைப்பாலத்தை கடக்க முயன்ற 5 மாடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

மலைக்கிராமம்

சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் அருகே உள்ள மாக்கம்பாளையம் மலைப்பகுதியில் கோம்பையூ்ா மற்றும் கோம்பை தொட்டி ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த மலைக்கிராமத்தில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக அதிக மாடுகளை வளர்த்து அதன் மூலம் வருவாய் ஈட்டுவதையே முக்கிய தொழிலாக கொண்டுள்ளனர். இந்த கிராமங்கள் அடர்ந்த வனப்பகுதியின் அருகாமையில் உள்ளது. இதனால் இங்குள்ள மக்கள் தங்களின் வளர்ப்பு மாடுகளை மேய்ச்சலுக்காக வனப்பகுதிக்கு ஓட்டிச்செல்வது வழக்கம்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக இங்குள்ள வனப்பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மாடு மேய்ப்பவர்கள் மாடுகளுடன் செல்ல முடியாமல் தன்னிச்சையாக மாடுகளை வனப்பகுதிக்குள் அனுப்பி வைத்து விட்டனர். இவ்வாறு காலையில் மேய்ச்சலுக்கு செல்லும் மாடுகள் அனைத்தும் மாலையில் தானாக தங்களின் இருப்பிடத்திற்கு வந்து சேர்ந்து விடும்.

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன

இந்தநிலையில் கோம்பையூர் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக அங்குள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் மாடுகளை பாதுகாப்பாக அழைத்து வருவதற்காக சிலர் வனப்பகுதிக்கு சென்றனர். பின்னர் தங்களுடைய மாடுகளை வீட்டுக்கு ஓட்டிவந்தனர். அப்போது கோம்பையூரில் உள்ள தரைப்பாலத்தை மாடுகள் கடக்க முயன்றன. வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதில் 5 மாடுகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. உடனே மாடுகள் தண்ணீரை எதிர்த்து நீந்தி தத்தளித்தபடி பாலத்தில் ஏற முயன்றன. ஆனால் அந்த மாடுகளால் ஏற முடியவில்லை. இதனால் அந்த மாடுகள் வெள்ள நீரில் இழுத்து செல்லப்பட்டன. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மாடுகள் எப்படியாவது கரை சேர்ந்துவிடும் என்ற நம்பிக்கையில் மாட்டின் உரிமையாளர்கள் காட்டாற்றின் கரை பகுதியில் தங்களுடைய மாடுகளை தேடி வருகின்றனர்.

கடம்பூர்

கடம்பூர் பகுதியில் பெய்த கனமழை காரணமாக விளைநிலங்களில் பயிரிடப்பட்டிருந்த உருளைகிழங்கு, பூண்டு, ஆகியவை தண்ணீரில் மூழ்கி அழுகி சேதமானது. சுமார் 200 ஏக்கருக்கு மேல் பயிர்சேதம் ஏற்பட்டதாக விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதனை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டு்ம் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story