கனமழை எச்சரிக்கை எதிரொலி: தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தேனி வருகை: கலெக்டருடன் ஆலோசனை
கனமழை எச்சரிக்கை எதிரொலியாக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தேனிக்கு வருகை தந்தனர். அவர்கள் கலெக்டருடன் ஆலோசனை நடத்தினர்.
தேனி
தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. தேனி மாவட்டத்திலும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேனி மாவட்டத்துக்கு அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் நேற்று வந்தனர். கமாண்டர்கள் அசோக்குமார் சுக்லா, சுபோத்சிங் ஆகியோர் தலைமையில் 25 பேர் கொண்ட குழுவினர் வந்தனர். இந்த குழுவினர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் முரளிதரனை சந்தித்து ஆலோசனை நடத்தினர். மாவட்டத்தில் பேரிடர் அபாயம் ஏற்பட கூடியதாக கண்டறியப்பட்ட இடங்கள் குறித்தும், பேரிடர் ஏற்பட்டால் மீட்பு பணிகள் தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது.
Related Tags :
Next Story