இடி, மின்னலுடன் பலத்த மழை


இடி, மின்னலுடன் பலத்த மழை
x

பட்டுக்கோட்டையில் 2-வது நாளாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்டையில் நேற்று இரவு 2-வது நாளாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது சாக்கடை கழிவு நீருடன் மழை நீர் கலந்து சாலையில் ஆறு போல் ஓடியது, மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.. பல இடங்களில் போக்குவரத்து தடைப்பட்டது. நகராட்சி ஆணையர் குமரன், நகர் மன்ற தலைவர் சண்முகப்பிரியா ஆகியோர் மழைநீர் புகுந்த பகுதிகளை பார்வையிட்டனர். நகராட்சி பணியாளர்கள் நகரில் தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்த மழையால் அடிக்கடி மின்தடை ஏற்பட்டது.இதேபோல் பாபநாசம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான 108 சிவாலயம், வங்காரம்பேட்டை, அரையபுரம், மட்டையாந்திடல் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு 1 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story