இடி-மின்னலுடன் பலத்த மழை
பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
தஞ்சாவூர்
பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டை பகுதியில் கடந்த ஒரு மாதமாக வெயில் சுட்டெரித்தது. இதனால் மக்கள் பகலில் வெளியே வரவே அச்சப்பட்டு வீடுகளில் முடங்கி கிடந்தனர். வெயில் சுட்டெரித்ததால் ஏரி, குளங்களில் தண்ணீர் வறண்டதால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில் பட்டுக்கோட்டை பகுதியில் நேற்று இரவு 7.30 மணிக்கு இடி,மின்னலுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை 8.15 மணி வரை நீடித்தது.தண்ணீர் இன்றி பயிர்கள் கருகி வந்த நிலையில் இந்த மழை பயன் உள்ளதாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதிராம்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இரவு பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் மழை பெய்தது. இந்த மழை 45 நிமிடங்கள் நீடித்தது. இந்த மழையால். மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. இதேபோல் மதுக்கூர் பகுதிகளில் மழை பெய்தது.
Related Tags :
Next Story