இடி, மின்னலுடன் பலத்த மழை
மயிலாடுதுறை மாவட்டத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது
மயிலாடுதுறை மாவட்டத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
வடகிழக்கு பருவமழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த மாதம் 11-ந் தேதி விடிய, விடிய பலத்த மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக சீர்காழியில் 44 செ.மீ. மழை பெய்தது. இது தமிழகத்திலேயே அதிக மழைப்பொழிவு என்று வானிலை மையம் தெரிவித்தது.இதன் காரணமாக சீர்காழி, தரங்கம்பாடி தாலுகாக்களிலும், மயிலாடுதுறை, குத்தாலம் தாலுகாக்களிலும் ஒரு சில இடங்களில் குடியிருப்புகளையும், நெற்பயிரையும் மழைநீர் சூழ்ந்து பாதிக்கப்பட்டது. குறிப்பாக சீர்காழி, தரங்கம்பாடி தாலுகா பகுதியில் தற்போது வரை மழைநீர் முழுமையாக வடியவில்லை.
இடி,மின்னுடன் மழை
இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு திடீரென இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. நேற்று பகலில் மழை பெய்யவில்லை.மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:-தரங்கம்பாடி-21, சீர்காழி-19, செம்பனார்கோவில்-16, மணல்மேடு-16, கொள்ளிடம்-9, மயிலாடுதுறை-5.