பட்டுக்கோட்டை, கும்பகோணம் பகுதிகளில் இடியுடன் பலத்த மழை


பட்டுக்கோட்டை, கும்பகோணம் பகுதிகளில் இடியுடன் பலத்த மழை
x

பட்டுக்கோட்டை, கும்பகோணம் பகுதிகளில் இடியுடன் பலத்த மழை

தஞ்சாவூர்

பட்டுக்கோட்ைட, கும்பகோணம் பகுதிகளில் நேற்று இடியுடன் பலத்த மழை பெய்தது. அதிராம்பட்டினத்தில் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

அதிராம்பட்டினம்

அதிராம்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இரவு சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரைச்சாலை பஸ் நிலையம், குடியிருப்பு பகுதிகள், உப்பளங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது. மீன்பிடி தடைகாலம் என்பதால் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. நாட்டுப்படகு மீனவர்கள் மட்டும் மீன் பிடிக்க கடலுக்குச்சென்று வரும் நிலையில் நேற்று மாலை மீன்பிடிக்க செல்லவில்லை. அதிராம்பட்டினம் கடற்கரை பகுதியான தம்பிக்கோட்டை, மறவக்காடு, அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை கீழத்தோட்டம் ஆகிய பகுதிகளில் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் உள்ள உப்பளங்களில் உப்பு உற்பத்தியாளர்கள் உப்பு வாரும் பணியில் ஈடுபட்டு வந்தனர். நேற்று இரவு பெய்த கனமழையால் உப்பு உற்பத்தி மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது.

பட்டுக்கோட்டை

அதேபோல் பட்டுக்கோட்டையில் நேற்று மாலை 6 மணிக்கு இடி மின்னலுடன் தொடங்கிய பலத்த மழை இரவு 8 மணி வரை நீடித்தது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கிய மின்தடை 7.15 மணி வரை நீடித்தது. பிறகு அடிக்கடி மின் தடை ஏற்பட்டது. இதனால் பட்டுக்கோட்டை நகரம் இருளில் மூழ்கியது.

கும்பகோணம்

கும்பகோணம் பகுதியில் நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது கும்பகோணம் நகரின் பல்வேறு பகுதிகளில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. காற்றின் வேகம் தாங்காமல் பல்வேறு பகுதிகளில் மின்கம்பங்கள் சாய்ந்து மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. இதனால் நகரின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டது. தகவல் அறிந்ததும் மின்வாரிய ஊழியர்கள் அறுந்து கிடந்த மின்கம்பிகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். .

ஆடுதுறை

கும்பகோணம் அருகே ஆடுதுறை ெரயில் நிலையம் அருகே டிரான்ஸ்பார்மர் உள்ளது. நேற்று மாலை ஆடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்று வீசியது. இதனால் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.

அப்போது ஆடுதுறை ெரயில் நிலையம் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. இதனை பார்த்ததும் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தகவல் அறிந்ததும் ஆடுதுறை மின்வாரிய ஊழியர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இதனால் ஆடுதுறை பகுதி முழுவதும் மின்சாரம் தடைப்பட்டது.


Next Story