ஓசூரில் கனமழை: வெள்ளக்காடாக மாறிய ரெயில்வே சுரங்க பாலம்-வாகன ஓட்டிகள் கடும் அவதி


ஓசூரில் கனமழை: வெள்ளக்காடாக மாறிய ரெயில்வே சுரங்க பாலம்-வாகன ஓட்டிகள் கடும் அவதி
x

ஓசூரில் கனமழையால் வெள்ளக்காடாக மாறிய ரெயில்வே சுரங்க பாலத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

கிருஷ்ணகிரி

ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நேற்று மாலை திடீரென மழை பெய்யத் தொடங்கியது. நேரம் செல்லச் செல்ல மழையின் வேகம் அதிகரித்து சுமார் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. பலத்த மழையின் காரணமாக ஓசூர் பஸ் நிலையம், பாகலூர் ரோடு சர்க்கிள், ஜி.ஆர்.டி. சர்க்கிள் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் வெள்ளம்போல் தேங்கி நின்றது.

இந்த நிலையில் ஓசூர் ரெயில் நிலையம் அருகில், ரெயில்வே சுரங்கப்பாதை வெள்ளக்காடாக மாறியது. இதனால் இந்த பாதையில் வாகன ஓட்டிகள், இரு சக்கர வாகனங்களில் செல்ல மிகவும் சிரமப்பட்டனர். இதனால் இரவு வெகுநேரம், வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நீண்ட தூரத்துக்கு இந்த பாதையில் அணிவகுத்து நின்றன. தொடர்ந்து இரவு முழுவதும் மழை பரவலாக பெய்தவாறு இருந்தது.


Next Story